2025 மே 10, சனிக்கிழமை

’கொரோனாவை விட பேரினவாதம் பயங்கரமானது’

Niroshini   / 2021 ஜூன் 22 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கொரோனா வைரஸை விட, இந்தப் பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றதென, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பாக உருவெடுத்துள்ள இக்காலகட்டத்தில், அரசியல் கைதிகளின் மன நிலையை அது பாதிப்பதாகவும் அவர்களுடைய அரசியல் மனநிலையை கொலை செய்வதொன்றாகவும் விளங்குகின்றதெனவும் கூறினார்.

குறிப்பாக, அரசியல் கைதிகளுடைய மனநிலையை தக்கவைப்பதற்கான வெளிச்செயற்பாடுகள் எதுவுமில்லாமல் இருப்பது, அவர்களுக்கு மன ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றதெனவும், அவர் கூறினார்.

இந்நிலையில், அரசியல் கைதிகளிளுடைய குடும்பத்தாரை கவனிக்க வேண்டிய பொறுப்பு, ஆட்சியாளர்களின் செயற்பாடுகளில் தான் இருக்கின்றதெனவும், சத்திவேல் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X