Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளையும் இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்திடமிருந்து எரிபொருள் கிடைக்காத காரணத்தால் கிளிநொச்சியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை நாங்கள் பார்க்கின்றோம். இது அவர்களைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மற்றுமொரு அடியாக உள்ளது.
எனவே,இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகும். அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது.
தனியார் ஊடாக உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சொல்கின்றபொழுதிலும், வடக்கில் தமிழ் மக்கள் உரத்தினை பெற்றுக்கொள்ளவோ அல்லது காணவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆகவே இது மிகப்பெரிய பின்னடைவையும், இந்த மக்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
39 minute ago
6 hours ago