2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், மூத்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சி பாரதிஸ்டார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் புகைப்பட துறையில் ஆர்வமாக செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவான்களாக திகழும் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .