2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

செட்டிகுளத்தில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஆர்ப்பாட்டமொன்றில் இன்று ஈடுபட்டனர்.

வவுனியாவில் இருந்து செட்டிகுளத்தில் உள்ள அரச திணைக்களங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள், குறித்த நேரத்தில் பஸ்கள் சேவையில் ஈடுபடாமையினால் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் செட்டிக்குளத்துக்கான இருவழி பாதை திருத்தம் செய்யப்படாமையினால் போக்குவரத்து செய்வதில் பல இடையூறுகளை சந்திப்பதாக அவர்கள் தெரிவிக்கிறன்றனர்.

இந்நிலையில், பிரதான பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரதது சபையின் பஸ்களும் சீரான நேர அட்டவனையில் சேவையில் ஈடுபடுவதில்லை என தெரிவித்ததுடன் அதிகளவான மக்களை பஸ்ஸில் ஏற்றிச்செல்வதால்,குறித்த நேரத்தில்  அலுவலகங்களுக்கு தம்மால் செல்ல முடியவில்லை என தெரிவித்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ முகாமையர் சந்தித்து கலந்துரையாடியதுடன், தான் பதவியேற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில், இது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வவுனியா அரசாங்க அதிபரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .