2025 ஜூலை 05, சனிக்கிழமை

சித்த மருத்துவ உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

George   / 2016 ஜூலை 30 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் கனடா நாட்டின் நிதி பங்களிப்பில் நிறுவப்பட்டுள்ள சித்த மருத்துவ உற்பத்தி நிலையத்தினை கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன், வெள்ளிக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து  பண்டத்தரிப்பில் அமையப்பெற்றுள்ள குறித்த உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலாளர்  நா.வேதநாயகன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .