2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் வசித்து வரும் 15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி, அவரைக் கர்ப்பமாக்கிய இளைஞனை, எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

பெற்றோர் இல்லாத இந்தச் சிறுமி, முன்னர் சிறுவர் இல்லமொன்றில் இருந்து அதன் பின்னர், அம்மம்மா மற்றும் மாமா ஆகியோருடன் வசித்து வந்துள்ளது.

இந்நிலையில் மேற்படி இளைஞன், சிறுமியுடன் பழகி சிறுமியை கரடிப்போக்குச் சந்திக்கு அண்மித்த விடுதியொன்று அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் சிறுமி 5 மாதக் கர்ப்பமடைந்த விவரம் அறிந்த சிறுமியின் மாமனார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிளிநொச்சியிலுள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி இளைஞனைக் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .