Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கல்மடு நகர்ப்பகுதியில் பாடசாலை செல்லாத சிறுவர்களை மீள இணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது, 3 சிறுவர்களின் பெற்றோர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர், கல்மடுநகர் பகுதியில் பாடசாலை செல்லாத சிறுவர்களை மீள பாடசாலைகளில் இணைக்கு செயற்பாட்டில் வியாழக்கிழமை (22) ஈடுபட்டனர்.
இதன்போது, பாடசாலை செல்லாத 3 சிறுவர்கள் வீடொன்றில் இருந்துள்ளனர். அவர்களை விசாரிப்பதற்காக அதிகாரிகள் சென்றபோது, அந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன், தகாத வார்த்தைகளாலும் ஏசியுள்ளனர்.
இதுதொடர்பில் அதிகாரிகளால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago