2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சொல்பேச்சு கேட்காதவருக்கு சிறை

George   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி, தட்டுவன் கொட்டிப் பகுதியில் அனுமதியின்றி அரச காணியில் உழவு இயந்திரத்தில் மணல் அகழ்ந்த நபருக்கு 1 மாதச் சிறைத் தண்டனையும், 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (21) தீர்ப்பளித்தார்.

அனுமதிப்பத்திரமின்றியும் இலக்கத்தகடு இன்றியும் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்;றிய ஒருவரை கைது செய்;;த பொலிஸார் அந்நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, அந்நபர் ஏற்கெனவே இவ்வாறான குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டவர் என்பதையும் பொலிஸார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதன்போது, அனுமதியின்றி மணல் ஏற்றியமைக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் இலக்கத்தகடற்ற வாகனம் பயன்படுத்தியமைக்கு 20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .