Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2016 ஜூலை 12 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்எ.ன்.நிபோஜன்
சட்டவிரோத கருக்கலைப்புச் செய்த குற்றச்சாட்டில், கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை, கிளிநொச்சி நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (11) மாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசாவின் உத்தரவுக்கமைய, வைத்தியசாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், இந்த வைத்தியசாலையைக் கொண்டு நடாத்திய வைத்தியரை 1 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணை ஆகியவற்றில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பம் தரித்து, அந்த கர்ப்பத்தை மேற்படி தனியார் வைத்தியசாலையில் கலைத்துள்ளார். இதனால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
தான் கருக்கலைப்புச் செய்தமை தொடர்பில் பொலிஸாரிடம் மேற்படி சிறுமி வாக்குமூலமளித்திருந்தார். அதற்கமைய மேற்படி தனியார் வைத்தியசாலையின் வைத்தியரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போதே, தனியார் வைத்தியசாலையை சீல் வைக்க உத்தரவிட்ட நீதிவான், வைத்தியரை பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago