2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துமாறு முக்கொம்பன் கிராம பொது அமைப்புகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த ஆற்றுப்பகுதியிலிருந்து மீள்குடியேற்றத்தின் பின்னர் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்படுகின்ற போதிலும் இச்சட்டரீதியான அனுமதிகளுக்கு அப்பால் தொடர்ச்சியாக மணல் கொண்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு அம்பலப்பெருமாள் குளத்திலிருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக முக்கொம்பன் பூநகரி சங்குப்பிட்டி வழியாக நாளொன்றுக்கு இருபது வரையான டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுகின்றது.

இது சட்டரீதியானதா? என்பதற்கு அப்பால் கிராமத்திலிருந்து பூநகரி பத்தாங்கட்டை வரையான புதிதாக அமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதி சேதமடைந்து வருகின்றன. டிப்பர்களை அக்கராயனில் இருந்து திருமுறிகண்டி வழியாக பயணிப்பதற்கான வழிகளை உருவாக்குங்கள். வீதிகள் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமலுள்ளன. இவ்வீதிகளில் டிப்பர்கள் பயணிப்பதனால் வீதி பெருஞ்சேதமடைந்து வருவதாகவும் பொது அமைப்புகளின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பன் வழியாக மணல் டிப்பர்கள் பயணிப்பது தொடர்பாக கடந்த 3ஆம்திகதி நடைபெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு டிப்பர்கள் மாற்று வழியினால் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .