2025 ஜூலை 16, புதன்கிழமை

சட்டவிரோத வாடிகள் அகற்றப்பட்டன

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, நாயாற்றுப்பகுதியில், சட்டவிரோதமாக வாடியமைத்து மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களின் ஆறு வாடிகளும், இன்று (10) அகற்றப்பட்டுள்ளன.

அண்மையில் நாயாறுப்பகுதியில், பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி நுழைந்து, வாடிகளை அமைத்து சட்டவிரோதத்தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், அங்கு தங்கியிருந்த சிங்கள மீனவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

நாயாறு கடலுடன் இணைகின்ற பகுதியில், 23 மீன்பிடிப்படகுகளை நிறுத்திவைப்பதற்கு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி, மத்திய கடற்றொழில் அமைச்சு, அனுமதிகளை வழங்கியிருந்தது.

உடனடியாகவே குறித்த அனுமதியானது நிறுத்தப்பட்டபோதும் சிங்கள மீனவர்கள், அந்தப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்த பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான எட்டு வரையான வாடிகளை அமைத்து, தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக உரிய தரப்புக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து சட்டவிரோதமாகப் போடப்பட்ட எட்டுவாடிகளில் ஆறு வாடிகள், உடனடியாக அகற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X