Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
விடுதலைப்புலிகள் இறுதி யுத்தகாலத்திலிருந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில், விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட, தங்கம் இருப்பதாக தெரிவித்து, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கபெற்றதையடுத்து சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் டி சரத் சந்திரபாலவின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர் அல்விஸ் பொலிஸ் அதிகாரிகளான கமகே (48759) சம்பத் (19136) விஜயகாந்த் (7230) முத்துனாஜக்க (60600) உள்ளிட்ட அணியினர், குறித்த வீட்டின் பின்புறமாகவுள்ள காட்டிலிருந்து, கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து, இன்று குறித்த இடத்தை தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் போது குறித்த 7 பெயரும் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் ஒரு பெட்டியில் குறித்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே, அகழ்வில் ஈடுபட்டதாக குறித்த சந்தேக நபர்கள் தெரிவித்தனர். குறித்த நபர்கள் மாத்தறை சிலாபம் மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு போலீசார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்
10 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago