Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் ஆற்றுப் பகுதியில், நீண்ட நாள்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை, புதுக்குடியிருப்பு பொலிஸார் மடக்கி பிடித்துள்ளார்கள்.
இச்சம்பவம், நேற்று முன்தினம் (10) மாலை இடம்பெற்றுள்ளது.
ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வந்த நிலையில், பொலிஸார் சென்று உற்பத்தி செய்துகொண்டிருந்த குடும்பஸ்தரை கைதுசெய்துள்ளதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்து சென்றுள்ளதுடன், சட்டவிரோதமாக காய்ச்சுவதற்கு தயாரான மதுபான கலவையை ஆற்றில் ஊற்றி அழித்துள்ளார்கள்.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026