Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவின் நந்திக்கடல், நாயாறு, மாத்தளன் சாலைப் பகுதிகளில் கூட்டுவலை உட்பட அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் இடம்பெறுவதன் காரணமாக, பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத தொழில் நடவடிக்கை காரணமாக, கடல் வளம் பாதிக்கப்படுகின்றது. கடந்த பத்தாண்டுகளாக இத்தொழில் நடவடிக்கைகளில் பலர் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டாலும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் மற்றும் பொலிசார் இணைந்து கட்டுப்படுத்தி வந்த நிலையிலும் தற்போது குறித்த தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதன் காரணமாக அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகளும் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை பிற மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினாலும் இந்திய கடற்றொழிலாளர்களினாலும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago