2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத தொழில்களுக்கு எதிராக 47 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 ஜூன் 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை 47 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 206 படகுகளுக்கான தொழில் அனுமதிகள் அமைச்சு மட்டத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும்  அவ்வாறான அனுமதிகளுடன் வருகின்ற படகுகள் தொழிலில் ஈடுபட அனுமதிப்பதாகவும் அனுமதியின்றி வருகின்ற படகுகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

முல்லதை;தீவு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்;ளப்பட்ட சட்டவிரோத அல்லது அனுமதியற்;ற தொழில்களில் ஈடுபட்;டவர்கள் கைது செய்ப்பட்டு இவர்களுக்கு எதிராக இதுவரை 47 வழக்குத்;தாக்கல்  செய்யப்பட்டிருப்பதாக மேற்படி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்;ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத தொழில்கள், நிபந்தனை மீறிய கடற்தொழில்கள் என்பவற்றால் இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 4500 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கங்கள் கடற்றொழில் சமாசம் மீனவர்கள் எனப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 400 இற்கும் மேற்பட்ட படகுகள் நிபந்தனைகளை மீறி தொழில்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான தொழில் நடவடிக்கையால் தமது வாழ்வாதாரமான கடற்தொழில் முழுமையாகவே பாதிப்படைவதாக சுட்டிக்காட்டியுள்ள மீனவர்கள் பெரும் முதலீடுகளைச் செய்து நாள் முழுவதும் கடலுக்;குச் சென்று வெறும்கையுடன் திரும்புகின்ற ஒரு நிலைமையே அதிகம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், நாயாறு, கொக்கிளாய் போன்ற பகுதி மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X