2025 மே 10, சனிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு: ’சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவோம்’

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கௌதாரிமுனையில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது தொடர்பில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுப்போம் என்றும் கூறினார்.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை பகுதியில். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் மேன்முறையீட்டு வழக்குக்கான அழைப்பு கிடைத்த 11 பேரையும். இன்று (28), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி நீதிமன்றம் வரை சென்றிருந்தனர். இதன்போது கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பிரதேசத்தின் பாதுகாப்புக்கும் பொதுமக்களுக்கும் சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 11 பேருக்கு அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X