2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு: வாகனங்களைக் கைப்பற்றிய பொலிஸார்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன்

அண்மைக்காலமாக சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையின் கீழ் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒர் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகள் முரசுமோட்டை ஊரியான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண்ல் அகழ்வில் ஈடுபட்ட 3 டிப்பர் வாகனங்களும், அதன் ஓட்டுநரும் தர்மபுரம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவிர, பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் அனுமதிப் பத்திரத்துக்கு முரணான வகையில் ஆற்றுப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு உழவு இயந்திரங்களும், அதன் ஓட்டுநரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X