Editorial / 2018 நவம்பர் 16 , மு.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளார்.
கனகையா உதயகுமார் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயலுக்கு காவல் வேலைக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.
பிரதேச மக்கள், இளைஞர்கள் இணைந்து தேடியும் காணாத நிலையில் படையினரின் உதவியுடன் பிரதேச இளைஞர்களும் இணைந்து தேடுதலில்; ஈடுபட்ட போது, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகளான பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த வயல் பகுதியில் சட்டவிரோத கம்பியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார்கள். இதில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago