Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
ஐந்து மற்றும் அதற்கு மேல் பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்களுக்கு கரைச்சி பிரதேச சபையால் மாதாந்தம் மூவாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகும் குறித்த வேலைத்திட்டத்தில் குறித்த ஆண்டில் இதுவரை 09 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளதாக, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவை வழங்குவதற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. ஒரு வருடத்துக்கு குறித்த சத்துணவு பொதிகள் பிரதேச சபையால் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது.
இதில், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், குடும்ப நல சுகாதார வைத்தியர் நிமால் கிஸ்ரோபன், குடும்பநல உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
55 minute ago