2025 மே 07, புதன்கிழமை

’சந்தையில் மக்கள் இல்லாமைக்கு போக்குவரத்து நெருக்கடியே காரணம்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு பொதுச்சந்தையில் மக்கள் குறைவாகக் காணப்படுவதற்கு போக்குவரத்து நெருக்கடியே பிரதான பிரச்சினையாக காணப்படுகின்றது என, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி.இமக்குலேற்ரா புஸ்பானந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த பத்து ஆண்டுகளில், முல்லைத்தீவு நகருக்குள் பஸ்கள் வருகை தருவதில் ஒழுங்கின்மை காணப்படுகின்றது என்றார்.

பஸ்கள் வருகை தராத நாள்களே கூடுதலாக உள்ளன எனத் தெரிவித்த அவர், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு நகரத்தில் பஸ்கள் தரித்து நின்றன எனவும் பொது மக்கள் சந்தை உட்பட பல்வேறு தேவைகளை நிறைவு செய்த பின்னர் பஸ்களில் ஏறி பயணித்தனர் எனவும் கூறினார்.

ஆனால், நகர அபிவிருத்தி ஏற்படுகின்ற போது, தற்போது மாவட்டச் செயலகத்துக்கு அருகில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளதால், நகர மத்திக்குள் மக்கள் செல்வதற்கு 300க்கும் அதிகமான மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இதனால், உள்ளுர் உற்பத்திப் பொருள்கள் சந்தைக்கு கொண்டு வருவதில் கூட பொதுமக்களுக்கு இடையூறுகள் உள்ளன எனத் தெரிவித்த அவர்,   மாவட்டத்தில் உள்ளுர் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள் முல்லைத்தீவு நகரத்துக்குள் வருகை தந்தாலே மக்களின் பிரச்சினை தீரும் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X