2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சபாநாயகர் கிளிநொச்சிக்கு விஜயம்

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்  

வெள்ள அனர்த்தத்தை ஆராய்வதுக்காக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று (03) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

விசேட உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர், மாவட்டச் செயலகத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பான நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீளவும் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பிலும் மாவட்டச் செயலர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி வைத்ததுடன் தேசிய சேமிப்பு வங்கியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .