Niroshini / 2021 ஜனவரி 05 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதன் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக விசேட காணி மத்தியஸ் சபை செயற்பட்டு வந்ததென்றார்.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக, விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது எனத் தெரிவித்த அவர், இந்நிலையில் எதிர்வரும் 9ஆம் திகதி சனிக்கிழமை முதல், வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் சுகாதார வழிமுறைக்களைப் பின்பற்றி நடைபெறும் எனவும் கூறினார்.
'குறித்த மத்தியஸ்தர் சபைக்கு சமூகமளிக்கும் முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிணக்காளர்கள் ஆகியோரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
'அந்தவகையில், வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் அமர்வுகள் எதிர்வரும் 9ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 1 மணிவரை செட்டிகுளம் பிரதேச செயலகத்திலும், 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை வவுனியா, குடியிருப்பு இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையிலும் (சீசீரிஎம்எஜ்), 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் வித்தியாலயத்திலும் நடைபெறும்.
'அதனைத் தொடர்ந்து வழமை போல் விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் இடம்பெறும்: எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025