2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

‘சமஸ்டியை ஒத்த ஆட்சி முறை இருக்கவேண்டும்’

Editorial   / 2018 ஜனவரி 29 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

‘இடைக்கால அறிக்கையில் சமஸ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும், சமஸ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்’ என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று (28) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘முஸ்லீம் மக்களுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்து, பிரச்சனைகளை தீர்க்கவேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது. அதில் நாம் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். தந்தை செல்வாவின் கருத்துக்கள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சார்பாகவே இருந்தது. அதை முஸ்லீம் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இடைக்கால அறிக்கையில் இணைப்பு இடம்பெறலாம். இடம்பெறாமல் இருக்கலாம். இணைப்பு நடைபெறுவதாக இருந்தால் சர்வஜனவாக்கெடுப்பு இடம்பெறவேண்டும் என்ற 3 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சமஸ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் அது சமஸ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்நிலையில், இதை தூக்கி எறிந்து விட்டு, இதில் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலை தற்போது இல்லை. இதை தொடர்ந்து எமக்கு ஏற்புடையதாக மக்களுக்கு ஏற்புடையதாக மாற்றவேண்டியது எமது பொறுப்பு’ என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X