2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சமூகவிரோத செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாடற்று இருக்கின்ற சுற்றுலா மையத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகளவில் காணப்படுவதாகவும், இதுதொடர்பில்பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் மாகாண சபையினால் 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு  மே மாதம் திறந்து வைக்கப்பட்டது. சுற்றுலா மையம் இதுவரை செயற்படுத்தப்படாமை கைவிடப்பட்ட நிலையில், கவனிப்பாரற்றுக்காணப்படுகின்றது.

குறித்த பகுதியில்வெளியிடங்களிலிருந்து வரும் இளைஞர்கள் இந்தப்பகுதியில் மதுஅருந்துதல் மற்றும் சமூகவிரோதச்செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றினால் தங்களுடைய பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள், குறித்த சுற்றுலா மையத்தினை சம்பந்தப்பட்ட திணைக்களம் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது அதனை செயற்படுத்தக்கூடிய வேறு அமைப்புக்களிடமாவது, கையளிக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X