Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சர்வதேச விசாரணை என எதுவும் நடக்கப்போவதில்லையெனத் தெரிவித்த வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமுமான வரதராஜ பெருமாள், தமிழர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டிய தேவையுள்ளதெனவும் கூறினார்.
வவுனியா விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (04) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கோட்டபாய ராஜபக்ஷவின் கடந்த காலம் பற்றிய விவாதங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து, மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதிநிதியாக கோட்டாபயவை நியமித்து இருக்கிறாரெனவும் இந்த நாட்டினுடைய முன்னேற்றங்களில், கோட்டாபய ஆற்றலுடன் செயற்படுவார் என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வார்களெனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை நம்பச் சொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பிசாசை விட பேயைக் கொண்டு வரலாமெனக் கூட்டமைப்பினர் கூறுகின்றனரெனவும் தெரிவித்தார்.
ஆனால், மோசமான பேயை விட தெரிந்த பிசாசு பரவாயில்லையெனத் தெரிவித்த அவர், இங்கு பேய்களும் பிசாசுகளும் தான் போட்டியிடப்போகின்றனவெனவும் நல்லவரைத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லையெனவும் கூறினார்.
ஆகையால் தெரிந்த பிசாசு என்ற ரீதியில், தாம் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கப்போவதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச விசாரணை என எதுவும் நடக்கப்போவதில்லையெனத் தெரிவித்த அவர், அதனை இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் விரும்பாதெனவும் கூறினார்.
ஒரு நாட்டின் மீது வேறு நாடுகள் தலையிடுவதையோ அல்லது ஒரு நாட்டின் இராணுவத்துக்கு எதிராக செயற்படுவதையோ எந்தவோர் அரசாங்கமும் அனுமதிக்காதெனவும், அவர் மேலும் கூறினார்.
4 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago