2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாலம்பைக்குளம் பாடசாலைக்கு பூட்டு

Niroshini   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க  அகரன்

சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, வவுனியா - சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்லிம் பாடசாலை புதன்கிழமை (16) வரை மூடப்படவுள்ளதாக. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து சாளம்பைக்குளத்துக்கு வருகை தந்த தாயும் மகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதை அடுத்து, குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, அந்தப் பகுதியில் உள்ள குறித்த பாடசாலையையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை. குறித்த பகுதியில். கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில்.  மேலும் மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள், சாளம்பைக்குளம் பகுதியில் ஏற்கெனவே இனம்காணப்பட்ட தாய், மகள் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களான அவரது கணவன் (வயது 38), அவருடைய மகள் (வயது 8), மகன் (வயது 2) ஆகிய மூவருக்குமே, இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .