Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர் கண்ணீர்விட்டுள்ளார்.
நேற்றையதினம் இரவு ஏழு மணியளவில், கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் அதே பகுதியைச் சேர்ந்த தாயொருவர், தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு கோரி, பிரசாரக் கூட்டத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
“கடந்த வருடம் க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றிவிட்டு குடும்ப கஷ்டம் காரணமாக, முந்திரிகை விதைகளை எடுத்து விற்று வந்த அவர், விற்ற முந்திரிகை விதைக்கான பணத்தைப் பெற வீட்டில் இருந்து சென்ற எனது மகனை துப்பாக்கி சன்னங்கள் வைத்திருந்தார் என குற்றம் சாட்டி, இராணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
“எவ்வித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. வீட்டில் இருந்து காசு வாங்குவதற்காக சந்திக்கு சென்ற எனது மகனிடம் எவ்வாறு புதிய துப்பாக்கி சன்னங்கள் வந்தன. இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விடயம் . எனது ஒரே ஒரு மகனை கடந்த 42 நாள்களாக சிறையில் விட்டு விட்டு மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம். எனவே அவரை எப்படியாவது நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும். அவருடன் சேர்த்து மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளார்கள்” என, கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பான சட்டவிடயங்களுக்கு தான் உதவுவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
1 hours ago