Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது குளங்களின் கீழ் இவ்வாண்டு 68 சதவீதமான நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டு, வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதாவது, அக்கராயன் குளத்தின் கீழ் உள்ள 3,417 ஏக்கரில் 2,790 ஏக்கரும், இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள 21,985 ஏக்கரில் 15,000 ஏக்கரும், கல்மடுக்குளத்தின் கீழ் உள்ள 3,450 ஏக்கரில் 1,346 ஏக்கரும், கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ் உள்ள 1,505 ஏக்கரில் 500 ஏக்கரும் குடமுருட்டிக்குளத்தின் கீழ் உள்ள 650 ஏக்கரில் 322 ஏக்கரும் புதுமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள 985 ஏக்கரில் 850 ஏக்கரும் வன்னேரிக்குளத்தின் கீழ் உள்ள 360 ஏக்கரில் 123 ஏக்கரும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, அக்கராயன் குளத்தின் கீழ் 466 ஏக்கரும், இரணைமடுக்குளத்தின் கீழ் 500 ஏக்கரும், திருவையாறு ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 600 ஏக்கரும், கனகாம்பிகைக்குளத்தின் கீழ் 200 ஏக்கரும். பிரமந்தனாறுக்குளத்தின் கீழ் 450 ஏக்கரும் என 2,216 ஏக்கரில் உப உணவுச்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேற்படி குளங்களின் கீழ் உள்ள 13,756.9 ஹெக்டெயர் நிலப்பரப்பில் 9,367.3 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, அறுவடைகள் நிறைவு பெற்று, அடுத்தகட்ட பயிர்ச்செய்கைக்கான தயார்ப்படுத்தல்களை விவசாயிகள் முன்னெடுத்து வருவதாகவும், நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago