2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிறுமியின் விநோத நடத்தை

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைவேலி பகுதியில் 14 வயதுச் சிறுமியினை காணவில்லை என பாதுகாவலர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான அன்று கைவேலி பகுதியில் பெற்றோரை இழந்த நிலையில் அக்காவுடன் வசித்துவரும் இச்சிறுமியைக் கற்றல் வகுப்புக்காக சிறுமியின் அத்தான் கொண்டு சென்று விட்டுள்ளார்.

இரவாகியும், சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் அக்கா புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதால் பெரும் பரபரப்புடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமியை அத்தான் படிப்பதற்காக கொண்டுசென்று இறக்கியதும் சிறுமி அத்தானிடம் பணம் வாங்கியுள்ளார். சிறுமி யாருக்கும் சொல்லாமல் புதுக்குடியிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பராக பழகிக் கொண்ட ஒருவரின் வீட்டுக்கு பஸ்ஸில் சென்றுள்ளார்.

உண்ணாப்பிலவு முல்லைத்தீவில் உள்ள நண்பி ஒருவரின் வீட்டிற்கே அவ்வாறு சிறுமி சென்றுள்ளார். அங்கு வெளிநாட்டில் உள்ள பாடசாலை சிறுமியின் நண்பர் எனச் சொல்லப்படும் குடும்ப பெண்ணின் கணவருக்கு அன்று பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்கள்.

இதன்பின்னர் அந்த நண்பியின் தொலைபேசி ஊடாக சிறுமியின் அக்காவுக்கு இரவு 9 மணிக்கு தொடர்பு கொண்டு தான் நிற்கும் இடத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் சிறுமியை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X