Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 17 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் 13 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர், 14 நாள்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாங்குளம் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காக திருகோணமலையை சேர்ந்த இளைஞன் வருகை தந்துள்ளனர்.
அவர் தங்குவதற்காக மாங்குளம், புதிய கொலனி கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன், வீடு ஒன்றும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை, மூதூர் பகுதியைச் சேர்ந்த மேற்படி இளைஞன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியையும் அவரின் விருப்பத்தின் பேரில் அழைத்துவந்து சுமார் ஒரு மாதகாலமாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பிலான தகவல், புதிய கொலனி பகுதியில் கிராமத்தில் அலசல் புலசலாக பேசப்பட்டது.
சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளமையைத் தொடர்ந்து சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இளைஞனை மாங்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி வாசல் தலத்தில் நேற்று (16) முன்னலைப்படுத்தப்பட்டபோது, 14 நாள்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள், திருகோணமலை - மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
8 hours ago
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
25 Sep 2025