Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 ஜனவரி 26 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
விபத்தில் காயமடைந்த சிறுவனைத் தாக்கிய, சிறைச்சாலை உத்தியோகத்தர்களை 50ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதியளித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஆனந்தராஜா, குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு இன்று (26) உத்தரவிட்டார்.
கடந்த 23 ஆம் திகதி மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பயணித்த சிறைச்சாலை பஸ்ஸ_டன் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது சைக்கிளில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தான்.
இதன்போது, குறித்த விபத்துக்கு சிறுவனே காரணம் என தெரிவித்து, உணவகம் ஒன்றினுள் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிறுவனை தாக்கினர். இதனையடுத்து சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தான். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள், புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சிறுவனை தாக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நான்கு பேர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இன்று (26) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago