Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய தரப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படுகின்ற துணுக்காய் பிரதேசத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில், கூடுதலான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவாக, கிராம மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, நுற்றுக்கும் மேற்பட்ட சிறுவ்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதாவது தேறாங்கண்டல், ஆலங்குளம், கோட்டைகட்டியகுளம், உயிலங்குளம் ஆகிய பகுதிகளிலேயே, இவ்வாறான பாதிப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொண்டபோதும், குறித்த சுகாதார வைத்திய அதிகாரி தொடர்ந்து விடுமுறையில் இருப்பதால், அது அதாடர்பான தகவல்களை பெறமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
05 Jun 2025