2025 ஜூலை 23, புதன்கிழமை

சிலாவத்துறை வைத்தியசாலை விரைவில் தரம் உயரும்

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் -சிலாவத்துறை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகத் தரம் உயர்த்துவதற்கு, தேவையான திட்ட வரைபுகளையும் ஆவணங்களையும் ஒரு மாதகாலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அதிகாரிகளைப் பணித்துள்ளார். 

மன்னார் - சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று (07) சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன விஜயம் செய்த போதே, இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். 

இதன்போது, சிலாவத்துறை வைத்தியசாலையில் நிலவும் ஆளணி, பௌதீகவள பற்றாக்குறை தொடர்பில் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரிவாக எடுத்துரைத்ததன் பின்னர், அமைச்சர் ராஜித சேனாரத்ன உடனடி தீர்வு வழங்குமாறு, சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். 

அத்துடன், மன்னார் -சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .