Niroshini / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்கள் 26 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்
இன்று (22) காலை, அவர் விடுத்துள்ள கொரோனா நிலைவர அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், மன்னார் மாவட்டத்தில், நேற்றைய தினம் மாலை மேலும், 46 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், 26 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
'மன்னார் மாவட்டத்தில், இந்த மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 399 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1,423 தொற்றாளர்களும், மொத்தமாக 1,440 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன' எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago