2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சீன தூதுவரின் கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம்

Niroshini   / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம் என, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர்  சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக  ஊடகவியலாளரினால் கேள்வி கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை சுயாதீனமான சுதந்திரமான நாடு என்ற ரீதியிலும் எங்களுடைய எதிர்காலத்துக்காகவும் வெளிவிவகார உறவினை தங்களுடைய நாட்டின் பெருமைக்காகவும் தனித்தன்மைக்காகவும் பாவிக்க வேண்டியதாக உள்ளது என்றார்.

இலங்கை ஒரு நாட்டின் பகடைக்காயாக மாறக்கூடாது எனத் தெரிவித்த அவர், அண்மையில் இடம்பெற்ற சீனத்தூதுவரின் விஜயம் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை விட, அவர் அங்கே கூறிய கருத்துகள் தமக்கு கரிசனையாக இருக்கின்றன எனவும் கூறினார்.

'அவை இந்தியாவையும் இலங்கையையும் பகை செய்யும் விடயங்களாக சிலர் ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்கள். இந்தியா எங்களுடைய தொப்புள்கொடி உறவு, எங்களுடைய உண்மையான தாய்நாடு, அங்கிருந்து வந்த மதம், மொழி எல்லாமே எங்களுக்கு சொந்தமாகியிருக்கிறது' எனவும், சுரென் எம்.பி தெரிவித்தார்.

எனவே இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாகவும், வருகின்ற நாள்களில் இந்த அரசியல் விடயம் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.     

               

               


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .