Niroshini / 2021 ஜூலை 05 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
தமிழர் தாயகத்தை விட்டு, சீனா வெளியேற வேண்டுமெனத் தெரிவித்த வவுனியா மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சீனா தமிழர்களின் நண்பர் அல்ல எனவும் கூறினர்.
வவுனியா மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (05) 1,600 நாள்களை எட்டியுள்ள நிலையில், போராட்டப் பந்தலுக்கு முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு தொடர்ந்து கருத்தரைத்த உறவுகள், கடந்த 74 ஆண்டுகளாக, தமிழர்கள் அரசியல் தீர்வுகளைக் கேட்டு வருகின்றனரென்றனர்.
ஐ.நா பாதுகாப்புக் குழுவில் தமிழர்களுக்கான நீதியை சீனா எதிர்க்கிறது என்பதற்காக, சீனா தமிழர்களின் நண்பர் அல்ல எனத் தெரிவித்த அவர்கள், எனவே, தமிழ் தாயகத்தை விட்டு சீனா வெளியேற வேண்டும் என்றும் கூறினர்.
மனித உரிமைகளில் அக்கறை கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள், இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த தாமதிக்காமல் செயற்பட வேண்முமென்றும், உறவுகள் கோரினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கொடிகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago