Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நீண்ட நாள்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவில் வழங்கக் கோரி, மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்களால், இன்று (25) காலை முதல், அடையாளப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மாதமும் தாங்கள் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும் கொரோனா காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தங்களுக்கு உரிய நேரத்தில், மேலதிக நேர கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியுமே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர்.
குறிப்பாக, கடந்த வருடத்துக்கான மேலதிக நேரக் கொடுப்பனவே நீண்ட இழுபறியின் பின்னர் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்த சுகாதார பணியாளர்கள், இவ்வருடத்தில் பல மாதங்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலதிக நேர கொடுப்பனவுகள் கிடைப்பதில், மேலும் தாமதம் ஏற்படும் பட்சத்தில், தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொள்வதை தவிர, தங்களால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .