2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘சுந்தரலிங்கத்துக்கு நினைவு சிலை வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா  தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சுந்தரலிங்கத்துக்கு நினைவு சிலை ஒன்றை அமைக்க வேண்டும் என வவுனியா நகரசபையின் உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த சிலையை, வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சிலைக்கு அருகிலோ அல்லது அரச அதிபரின் அனுமதியைப் பெற்று தற்போது பண்டார வன்னியன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் அமைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பாக கடந்த 13ஆம் திகதி   வவுனியா  நகரசபையிலும் பிரேரணைகள் சமர்ப்பிக்கபட்டுள்ள போதும், நேரம் காணாத காரணத்தால், குறித்த விடயங்கள்  கடந்த அமர்வில் விவாதிக்கபடவில்லை என்றார்.

அத்துடன், நடைபாதை வியாபாரிகளுக்காக தற்போது நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அங்காடி விற்பனை நிலையத்தை உடனடியாக அகற்றி அதனை “ப” வடிவில் புதிதாக அமைத்துக் கொடுத்து கடை வீதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளை அங்கிருந்து அகற்றி, மேற்படி இடத்தில் வசதி செய்து கொடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X