Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி முழங்காவில் சுமன் பண்ணைக் காணியை, தனிநபர் ஒருவர், தொடர்ச்சியாக சுத்தம் செய்து வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக, பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
17 ஏக்கர்களைக் கொண்ட குறித்த காணியை, முழங்காவில் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம் ஆகியவற்றுக்கு பகிர்ந்தளிக்குமாறு, குறித்த பிரதேச பொது அமைப்புகள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வியமைச்சர் மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், குறித்த காணிப்பகுதியை, தனிநபர் துப்பரவு செய்யும் பணிகளை நிறுத்திக்கொள்ளுமாறு, பூநரி பிரதேசத்தின் செயலாளர், கிராம அலுவலகர் மூலமாக அறிவுறுத்திய போதிலும், அவர், தொடர்ச்சியாக இந்த வேலையில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில், வடமாகாண முதலமைச்சர், பூநகரிப் பிரதேசச் செயலாளர் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக, ஆர்ப்பாட்டங்களை முன்னடுப்பதைத் தவிற, வேறு வழியில்லை என்று, பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பெண் அரசியல்வாதி ஒருவரின் பலத்துடனேயே, குறித்த நபர் செயறப்ட்ட வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, குறித்த பதினேழு ஏக்கர் காணி, இராணுவத்தினால் கையளிக்கப்பட்டு, தற்போது பூநகரி பிரதேச செயலகத்தின் பொறுப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago