Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
கிளிநொச்சியில், பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுயேச்சை குழு - 03இன் ஆதரவாளர்கள் மீது மற்றுமொரு சுயேச்சை குழுவின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - வன்னேரிக்குளம் பகுதியில், நேற்று முன்தினம் (26) மாலை பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுயேச்சை குழு - 3 (வீஸ்மர் சமுதாய முன்னேற்ற கழகம்) இளைஞர் கழக உறுப்பினர்கள் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞர் ஒருவர், அக்கராஜன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் என, தாக்குதலுக்கு இலக்கான சுயேச்சை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026