2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

செக்கட்டிப்புலவு அ.த.க பாடசாலை புதிய வகுப்பறை கட்டம் திறப்பு

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

 

வவுனியா - செக்கடிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடத்தொகுதி, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்தியக் கொன்சலேட் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரன் ஆகியோரால், இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், சுமார் 58 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தில், அலுவலக அறையும் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில், வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் மு. ராதாகிருஸ்ணன், கோட்டக்கல்வி அதிகாரி மரியநாயகம், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .