2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் சவால்கள்

Yuganthini   / 2017 ஜூன் 25 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினூடாக, செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய சவால்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேச சபைகளின் கீழ், பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, கரைச்சி பிரதேச சபை நகர சபையாக தரமுயர்தப்படாமையும் கண்டாவளை பிரதேச சபை உருவாக்கப்படாமை, சில கிராம அலுவலர் பிரிவுகளின் எல்லைகள் தெளிவின்மை, செல்வாநகர் கனகபுரம் அம்பாள் குளம் ஆகிய எல்லைகள் இதனால் சோலைவரி மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை, வீதிகள் புனரமைப்பு வேலைகளுக்கு கிரவல் மண் பெற்றுக் கொள்ள முடியாமை, மாவட்ட பொதுநூலகத்துக்கான பொருத்தமான இடம் மற்றும் கட்டடம் அமையப் பெறாமை, கழிவகற்றல் செயற்பாடுகளுக்கான திண்மக் கழிவகற்றல் நிலையம் இன்மை போன்ற பாரிய சவால்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .