2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

செயலாளருக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பரந்தாமனுக்கு எதிராக, மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால், கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (20) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 55 குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களை, மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி சாந்தி ஜெயசேகராவிடம் கையளித்தார்.

இதையடுத்து, அவ்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் செயலாளர் இதற்கான நடவடிக்கையை உடன் எடுப்பதாக உறுதியளித்தார்.

இதேவேளை, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் கணக்காய்வாளர் நாயகம் குணவர்தன ஆகியோருக்கும் இந்த ஆவணங்களை,  லிங்கநாதன் கையளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X