சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 மே 30 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் வெட்டிப் படுகாயங்களுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர்.
இதன்போது வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரு வாள்கள், சில கூரிய ஆயுதங்களும் கப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சி பொலிஸார் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் செல்வா நகர் பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் கர்ப்பிணி உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 15 க்கும் மேற்பட்டவர்கள் வாள் வெட்டில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இரு மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு தற்காலிக வீடும் எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
42 minute ago