2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’சேதன பசளை உற்பத்திக்காக நிலம் கோரல்’

Niroshini   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், சேதன பசளையை உற்பத்தி செய்வதற்காக, தனியார் ஒருவர் 49 ஏக்கர் நிலத்தை கோரியள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட மேலதி செயலாளர்  க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், சேதனபசளை உற்பத்தி தொடர்பிலான முக்கிய கூட்டமொன்று, கேப்பாபிலவில் உள்ள 59ஆவது படைப்பிரில், நேற்று  (20) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பசுமை விவசாயத்தை, முல்லைத்தீவு மாவட்டத்தில் விருத்தி செய்யும் நோக்கில், கமநலசேவை  நிலையங்கள் மற்றும் விவசாய திணைக்களங்கள், மாவட்டச் செயலகம் ஊடாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

தனிப்பட்டவர்களும் சிறிய மற்றம் நடுத்தரளவிலான பசளை உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றார்கள் எனத் தெரிவித்த அவர், தனியார்கள் சேதன பசளை உற்பத்திக்காக பாரியளவிலான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் கூறினார்.

அதற்கான நிலத்தையும் கோரியுள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், மாந்தை கிழக்கில், தனியார் ஒருவர் 49 ஏக்கர் நிலத்தை, சேதன வளமாக்கிகளை உற்பத்தி செய்வதற்காக கோரியுள்ளார் எனவும் கூறினார்.

இந்த அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிப்பதற்கு தனியார்கள் முன்வந்து சேதனை உற்பத்தியை மேற்கொள்ளும் போது மாவட்டத்துக்கு தேவையான உரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .