Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 13 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வடக்கில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட சோதனை நிலையங்கள் அனைத்தையும், தற்போது நிதந்தரமாக அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வடக்கில் முதன்மை வீதிகளில் மாவட்டங்கள் தோறும் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதிச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, ஆனையிறவு பகுதியில், பாரிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, பஸ்கள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. இது வடக்கின் முதன்மைச் சோதனை சாவடியாகக் காணப்படுகின்றது.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வவுனியாவில் இருந்து செல்லும் வீதி, மாங்குளத்தில் இருந்து செல்லும் வீதி, வெலிஓயாவில் இருந்து செல்லும் வீதி, கிளிநொச்சியில் இருந்து செல்லும் முதன்மை வீதி ஆகியவற்றில், படையினரின் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, பஸ்கள், ஊர்திகள் ஆகியன சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், பயணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், வெலிஓயாவில் இருந்தும் கொக்குளாய் பகதியில் இருந்தும் செல்பவர்கள், கோப்பாய் சந்திப் பகுதியில் அமைக்கப்பட்ட படையினரின் சோதனை நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரும், பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
அத்துடன், ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியிலும் படையினர் சோதனை நிலையம் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இரவு நேரங்களில், வீதிகளில் ஆங்காங்கே முக்கியமான இடங்களில் வீதி மறியல் போடப்பட்டு, சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
46 minute ago
2 hours ago