Freelancer / 2023 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டத்தின் கீழ் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை(19) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் நெறிப்படுத்தலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதி நிதிகள், வன வள திணைக்களை பிரதி நிதிகள்,வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப் படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது பிரதேச செயலாளர்கள், கணி உத்தியோகஸ்தர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் முன்னால் நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கூட்டம் ஏற்கனவே காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தொடர்பில் தெரியப்படுத்துவதற்கான கூட்டமாகவே காணப்பட்டது.
அதே நேரம் உள்ளூர் அரச பிரதி நிதிகளினால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் இறுதியான விடுவிப்பு தொடர்பிலும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களை மேலதிக அனுமதிக்காக அனுப்பிவைப்பதற்கான தீர்மானமே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கூட்டத்திற்கு அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்ட போதிலும் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறான கூட்டங்களுக்கு உரிய விதத்திலும் உரிய நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரச தரப்பு அரசியல் பிரதிநிதிகள் வாய்ப்பு வழங்குவதில்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். R
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025