Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 30 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தமிழர்களின் பிரச்சினைகள் தொடப்பில் இதயசுத்தியுடன் செயற்படத் தயாரா என ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முடிந்தால் செய்து காட்டுங்கள் எனவும் சவால் விடுத்துள்ளார்
இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தால் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பொலன்னறுவையில் பொசன் நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற ஜனாதிபதி, அங்குள்ள சிங்கள மக்களுடன் மேலைத்தேய அரசத் தலைவர்கள் போன்று எளிமையாக நடந்து கொள்கிறார்.
ஆனால் நம்பி வாக்களித்த எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
எமது மக்கள் எல்லாவற்றுக்கும் தெருவில் இருந்து போராடவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்த நாட்டிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பிலும் எவ்வித அக்கறையுடனும் அரச தலைவர் செயற்படவில்லை. சிங்கள் மக்களிடம் மேலைத்தேய அரசியல்வாதிகள் போன்றும் எளிமையானவர் போன்றும் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி, தமிழர்களாகிய எம் முன் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்க இதயசுத்தியுடன் செயற்படத் தயாரா? எனக் கேள்வியெழுப்பினார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago