Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, அவர்களது வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது.
இதன்போது குற்றசாட்டிற்கு உள்ளானவர்கள் சார்பாக மன்றில் அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்தார்கள்.
சட்டத்தரணிகள் நீதவானிடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக தொடர்ச்சியாக வழங்கு தாக்கல் செய்யப்படாமல் சட்டமாஅதிபரிடம் இருந்து எதிர்பாக்கப்படுவதாக சொல்லப்படுவதை அடுத்து, அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரம் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும் என்று நீதிபதியால் சொல்லப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
31 minute ago
59 minute ago