2025 மே 10, சனிக்கிழமை

’டக்ளஸ் எங்களிடம் ஆலோசனை கேட்பதில்லை’

Niroshini   / 2021 ஜூன் 20 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

தங்களிடம் எந்தவிதமான ஆலோசனைகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்பதில்லையென்று, வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, 'அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலுக்குள் பஸ்களை இறக்குவதற்கு முன்னர், உங்களிடம் ஆலோசனை கேட்டாரா?' என, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், 'எல்லாம் எனக்கு தெரியும். நான் இதில் அனுபவம் மிக்கவர்' என்று ஏற்கெனவே, அமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளாரென்றும் அதன் காரணமாக அவர் தங்களிடம் அபிப்பிராயம் கேட்பதுமில்லையென்றும் தங்களுடைய அபிப்பிராயத்தை செவிமடுப்பதும் இல்லை என்றும் கூறினார்.

தான் அந்த பஸ்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த அவர், அது, கோது போல உள்ளதுடன், கீழ்ப்பகுதி பாரமற்றும் காணப்படுவதாகவும் கூறினார்.

கடலில் இறக்கப்பட்ட அந்தப் பஸ்கள் நிலையாக இருக்குமாக இருந்தால், அதன் பயன் குறுகிய காலத்தில் தங்களுக்கு கிடைக்குமென்றும் ஆனால், அது காற்றினாலேயோ அல்லது வேறு காரணங்களினாலேயோ நகருமாக இருந்தால், அதனைப் போட்டதில் எந்தவிதமான பிரியோசனமுமில்லை என்றும், சுப்பிரமணியம் தெரிவித்தார்.

'இந்தியாவில் மல்லி பட்டினத்துக்கு நேராக செயற்கை கடல் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆழிக் கடலிலே இருந்து கப்பல் மூலம் பாரிய பாறைகளைக் கொண்டுவந்து அங்கே போட்டு செயற்கையாக மீன் வாழும் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. அது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஏனென்றால் , அந்தப் பாறைகள் அரங்காது இருந்து, மீன்கள் அதில் வளரும்.

'பஸ்களை கடலில் இறக்கும் நடவடிக்கையால் முழுமையான பயனை அடையமுடியுமா என்பதை, சூறாவளிகளும் சுழல் காற்றுகளும் வருவதனை வைத்துதான் கணிப்பிட முடியும்' என்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X